திருமணமான ஒன்றரை மாதத்தில்.. புதுமணப்பெண்ணின் பரிதாபம்!

9 August 2020, 8:02 pm
viruthunagar Murder - Updatenews360
Quick Share

விருதுநகர் : திருமணமான ஒன்றரை மாதத்தில் கணவர் வீட்டில் புதுமணப்பெண் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பெரியார் காலனியை சேர்ந்த செல்வபாண்டியன்(வயது 26) என்பவருக்கும் சத்யா நகரை சேர்ந்த பிரகதி மோனிகா(வயது 24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு கணவர் வீட்டிற்கு புதுமணப்பெண் சென்றார். கணவர் செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். திருமணமாகி இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த பிரகதி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த கணவன், அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரகதியின் உடலைக் கைப்பற்றி பிரேசத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகமும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார்? நகைக்காக கொலையா? வேறு ஏதேனும் காரணமா என போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.