தகாத உறவால் மகனை கொலைகாரனாக்கிய தாய்..!!! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

1 December 2020, 11:37 am
murder - updatenews360-Recovered
Quick Share

விருதுநகர் : ராஜபாளையம் அருகே தனது தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு மலையடிபட்டி எம்ஜிஆர் பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் ராமர் (56). இவர் அதே பகுதியில் வசித்து வந்த மாரியம்மாள் என்ற பெண்ணிடம் தகாத உறவு வைத்துள்ளார். இது இரு வீட்டாருக்கு இடையே அவ்வப்போது பிரச்சனைகள் எழுந்துள்ளது

இந்த நிலையில், மாரியம்மாள் மகன் மாடசாமி மதன் (25), தனது தாயுடன் வைத்துள்ள தகாத உறவை துண்டித்து கொள்ளுமாறு இராமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்போது, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் கைகலப்பு ஏற்பட்டதில், மாடசாமி மதன் ராமரை கத்தியால் குத்தி சம்பவ இடத்திலேயே கொலை செய்தார்.

இக்கொலை சம்பந்தமாக இராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தகவலறிந்து வந்த இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாங்கசங்கர் மற்றும் தெற்கு காவல் நிலைய குற்றபிரிவு ஆய்வாளர் கணேஷ் தாஸ், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மாடசாமி மதனை கைது செய்தனர்.

பின்னர், உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தாயுடன் ஏற்பட்ட தகாத உறவுதான் கொலைக்கு காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0