சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

8 September 2020, 8:57 am
Dharapuram Child Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்தில் சிறுவன் உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தளவாய் பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கட்டுமான தொழிலாளி இவரது மனைவி கார்த்திகா இவர்களுக்கு 2 வயதேயான தன்வந்த் யாதவ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததால் சிறுவனின் வீட்டின் முன் இருந்த பழைய வீடு ஒன்றின் சுவர் மழையில் நனைந்து நன்றாக ஊறி இருந்தது நேற்று மாலை சிறுவன் தன்வந்த் யாதவ் பழைய வீட்டு சுவரின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பழைய சுவர் இடிந்து சிறுவன் மீது விழுந்தது இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்க உறவினர்கள் முயற்சி செய்தும் பலனளிக்காத நிலையில் மயங்கி கிடந்த சிறுவனை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.

சிறுவனை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்து விட்டதாக கூறவே உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் பரிதாப காட்சியாக இருந்தது சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது

Views: - 0

0

0