குழித்துறை கூட்டுகுடிநீர் குழாய் உடைப்பு.. 20 அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்த குடிநீர்… அடிக்கடி குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்!!

Author: Babu Lakshmanan
18 May 2022, 1:21 pm

கன்னியாகுமரி: சாமியார்மடத்தில் குழித்துறை கூட்டுகுடிநீர் ராட்சத குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது.

குமரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதில் குழித்துறை கூட்டுகுடிநீர் திட்டமும் ஒன்றாகும். இந்த தண்ணீர் குடிப்பதற்கும், சமையலுக்கு பயன்படுத்த உதவுவதால், இந்த தண்ணீரையே பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக பல இடங்களில் வழங்கப்படவில்லை என அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் சிக்கல் நீடித்து வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் பைப்லைன் உடைப்பு என கூறுவதும் வாடிக்கையான விஷயமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சாமியார்மடம் பகுதியில் குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நீரூற்று போல் வெளியேறியதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டு சென்றனர்.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மெயின் குழாயை அடைத்து தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்தினர்.

அடிக்கடி இதுபோன்று உடைப்பு ஏற்படுவதால், அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!