தலைமையை நம்பி நாங்க இல்லை… அதிமுகவில் மாற்றம் வேண்டும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2021, 3:39 pm
தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய செல்லூர் ராஜூ, தலைமையை நம்பி அதிமுக இல்லை என்றும் தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது எனவும் கூறினார்.
Views: - 298
0
0