சூரப்பாவின் ஓழுங்கீனமற்ற செயலுக்கு விளக்கம் வேண்டும் : அமைச்சர் சி.வி சண்முகம் வலியுறுத்தல்!!

Author: Udayachandran
15 October 2020, 3:41 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் : எந்த சூழலிலும் இட ஒதுக்கீட்டுக்கு பாதகம் செய்யும் எந்த ஒரு முறையையும் அரசு ஏற்காது என அமைச்சர் சிவி சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துகொண்டார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி.சண்முகம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாக செயல்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிறப்பு அந்தஸ்து வழங்க கேட்டு துணைவேந்தர் ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆராயப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. எந்த சூழலிலும் இட ஒதுக்கீட்டுக்கு பாதகம் செய்யும் எந்த ஒரு முறையையும் அரசு ஏற்காது. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசை நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார். சொந்தமாக நிதி ஆதாரங்களை திரட்ட முடியும் என கூறியுள்ளார். சூரப்பாவின் இந்த ஒழுங்கீன நடவடிக்கைக்கு தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது என தெரிவித்தார்.

Views: - 59

0

0