திமுக வாக்குறுதி குறித்து அப்போதே அதிமுக சொன்னது இப்போது நிரூபணமாகியுள்ளது : ஓபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2021, 4:04 pm
OPS -Updatenews360
Quick Share

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் பொழுது திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர் சந்தித்தார். அப்போது நகராட்சித் தேர்தலில் அதிமுகவின் வியூகம் குறித்த கேள்விக்கு, நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது.

குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியது குறித்த கேள்விக்கு, திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு குறித்த கேள்விக்கு, நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 546

0

0