கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

Author: Udayachandran
2 January 2021, 5:12 pm
vijayabhaskar-Updatenews360
Quick Share

கோவை : கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் 30 நிமிடங்கள் அங்கேயே காத்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : 2020ல் மிக சிறப்பாக களப்பணியாற்றிய முதலமைச்சர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து மருத்துவ பணியாளர்களையும் பாராட்டி கோவை விழா நடைபெற்றது.

2020ம் ஆண்டில் ஒட்டுமொத்த்த உலகமே உயிர் பயத்தில் இருந்தது, இப்பொழுதும் லண்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் லாக்டவுனில் உள்ளது. தமிழகம் நிம்மதியாக இருக்கிறது என்றால் இந்த அரசு மற்றும் முதலமைச்சரின் வியூகம் தான். உலக நாடுகள் தமிழகத்தை புருவத்தை உயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தினசரி ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட். 1 கோடியே 40 லட்சம் டெஸ்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 7 லட்சம் பேருக்கு மேல் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் தினமும் 70 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் எடுக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகள் 17 இடங்களில் நடக்கிறது. 2.5 கோடி தடுப்பூசிகளை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுகப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி 3 கட்டமாக வழங்கப்பட உள்ளது. யார் தடுப்பூசி போட்டாலும் 30 நிமிடம் அங்கேயே இருக்க வேண்டும். அங்கு கண்காணிக்கப்படுவார்கள்.

2 மணி நேரத்திற்கு 25 பேருக்கு தான் தடுப்பூசி போட உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும். அம்மா மினி கிளினிக்கில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது. அதற்காக 47,200 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு தடுப்பூசி வழங்கப்படும் . முதலில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.

Views: - 53

0

0