2011ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் தமிழகம் எப்படி இருந்தது : மக்கள் எடை போட முதலமைச்சர் வேண்டுகோள்!!

24 January 2021, 6:41 pm
CM - Updatenews360
Quick Share

கோவை : 2011ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் தமிழகம் எப்படி இருந்தது என்பதை மக்கள் எடைப்போட்டு பார்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி இன்று புலியகுளத்தில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை துவக்கினார். கோவையில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க கூட்டு குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியதாக கூறினார்,.

பின்னர் சிங்காநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், இந்திய அமைதிப்பூங்காவாக தமிழகம் உள்ளதாகவும், தமிழகம் தான் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளதாக கூறினார்.

பின்னர் பீளமேடு பகுதியல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், 2011க்கு முன்பும் பின்பும் தமிழகம் எப்படி இருந்தது என்பதை மக்கள் எடை போட்டு பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே போல அன்னூர் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், கரியாம்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக அரசின் தேர்தல் அறிவிப்புகள் அடித்தட்டு மக்கள் முதல் அனைவரயும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் பேசிய முதலமைச்சர், விலையில்ல மிக்சி, கிரைண்டர், தாலிக்கு தங்கம் மற்றும் பெண்களுக்கு இருசக்கர வாகனத்துக்கு மானியம் அளித்து வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார்.

பின்னர் சாய்பாபா காலனி பகுதியல் பிரச்சாரம் செய்த அவர், மக்களிடம் உண்மையை பேச வேண்டும் என்றும், செய்ததை சொல்லி, சொல்வதை செய்ததால்தான் வெற்றி பெற முடியும் என கூறினார்.

Views: - 0

0

0