திமுக ஆட்சியில் மின்வெட்டிற்கு பஞ்சம் இல்லை : முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!
Author: Babu Lakshmanan5 October 2021, 11:14 am
கரூர் : திமுக ஆட்சியில் மின்வெட்டிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்று முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 8 வது வார்டு கவுன்சிலராக அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து வைரமடை, வெட்டுக்காட்டு வலசு காலனி,
வெட்டுக்காட்டு வலசு, காளிப்பாளையம், தேவனம்பாளையம், தொட்டியப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்காக, கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஆட்சியில் மின்வெட்டிற்கு பஞ்சம் இல்லை, பொய் வாக்குறுதிகளை மட்டுமே கூறி ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக தான் என்றார். மேலும், எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார்கள் என்றும், ஆகவே இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்
0
0