கோப்பைகளை கையில் ஏந்திய போது கண்கலங்கி விட்டேன் : நடராஜன் நெகிழ்ச்சி!!!

24 January 2021, 5:07 pm
Natarajan- Updatenews360
Quick Share

சேலம் : கடின உழைப்பு இருந்தால் இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெறலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் யாக்கர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி வீரர்கள் சொந்த நாடு திரும்பினர். இந்த நிலையில் தனது சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டிக்கு வந்த நடராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்தபிறகு சேலம் வந்தபோது சின்னப்பம்பட்டி ஊர் பொதுமக்கள் திரண்டு அளித்த வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு வரவேற்பினை சின்னப்பம்பட்டி கிராம மக்கள் எனக்கு அளித்துள்ளனர்.

இது அதிகப்படியான சந்தோஷத்தை எனக்கு கொடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது கடவுள் கொடுத்த வரம் ஆகவே கருதுகிறேன். கடந்த இரண்டு மாதகாலம் அடுத்தடுத்து ஒருநாள் போட்டி 20 ஓவர் போட்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மிகப்பெரிய கனவு போல உள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற உதவி வேண்டும் வேறு எந்த பிரச்சனையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இணைந்து விளையாடியது மிகப்பெரிய உதவியாக இருந்தது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது என்னுடைய பந்துவீச்சை பலப்படுத்திக் கொள்ள மிகுந்த உதவியாக இருந்தது என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார்

இந்தியா வெற்றி பெற்ற தருணங்களில் கோப்பைகளை கையிலேந்தி அது எத்தகைய உணர்வை கொடுத்தது என்பது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த நடராஜன் இரண்டு கைகளையும் கையிலேந்திய உடன் கண் கலங்கிவிட்டது.

மிகுந்த நெகிழ்ச்சியுடன் இந்திய நாட்டிற்காக விளையாடி அதன் வெற்றி என்னுடைய கையில் கோப்பைகள் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற கடின உழைப்பு மட்டுமே போதும் என்று கருத்து தெரிவித்த நடராஜன் இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற வேண்டுமெனில் கடினமான உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அந்த கடினமான உழைப்பை அவர்களை இந்திய அணியில் இடம் பெற செய்து விடும் என்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் மீம்ஸ்கள் குறித்து குறிப்பிட்ட நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்தது முதல் தொடங்கி தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல என்னை நினைத்து சமூக வலைதளங்களில் மிக பெரிய ஆதரவினை வழங்கியதாகவும் இந்த மிகப்பெரிய ஆதரவு என்றார்.

ஆட்டத்தின்போது அதனுடைய முழுமையான ஆற்றல் திறனை வெளிப்படுத்த உதவியது என்றும் கூறினார். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தன்னை அவர்கள் வீட்டு பிள்ளை போல நினைத்து மிகப்பெரிய ஆதரவினை வழங்கி வருவதாகவும் இதற்கு மக்களுக்கு தன்னால் இயன்ற அளவு முழுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் நடராஜன் தெரிவித்தார்

Views: - 0

0

0