‘டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க’ : கிராமத்து பெண்களிடம் சிக்கிய திமுக நிர்வாகி ஜக்கம்மா கோவிந்தன்.. அடுத்த நொடியே எஸ்கேப்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 2:53 pm

‘டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க’ : கிராமத்து பெண்களிடம் சிக்கிய திமுக நிர்வாகி ஜக்கம்மா கோவிந்தன்.. அடுத்த நொடியே எஸ்கேப்!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மோடி அரசால், பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு, ஜிஎஸ்டி வரியால் மக்கள் படும் அவதி குறித்து குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கே இருந்த பெண்கள் முதலில் ஒயின் ஷாப்பை மூட சொல்லுங்க, இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர், ஆனால் தமிழக இளைஞர்களுக்கு படித்த ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது, எனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துங்க.

இதெல்லாம் ஏற்படுத்தி கொடுங்க நாங்க ஓட்டு போடுகிறோம் என ஜக்கம்மா கோவிந்தனிடம் பல்வேறு கேள்விகளை பெண்கள் சராமரியாக கேட்டனர். அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகி ஒருவர் டைம் ஆச்சு அடுத்து ஏரியாவுக்கு கிளம்பலாம் என கூட்டத்துடன் தப்பித்து சென்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!