சோசியல் மீடியாவையே அலறவிட்டுடாங்க.. யாருப்பா அந்த TTF வாசன்? ஒரே இடத்தில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 10:02 pm
TTF Vasan - Updatenews360
Quick Share

யாருய்யா நீ, இவ்வளவு நாளா எங்க இருந்த என்று கேட்கும் அளவுக்கு சோசியல் மீடியா முழுவதும் அலங்கரித்த அந்த டிடிஎஃப் வாசன் பற்றி தெரிஞ்சுக்கலாம்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் கடந்த சில வருடமாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக யூடியூப் லைவ், இன்ஸ்டா போன்றவற்றில் இளைஞர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் பிரபலமாகி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் இந்தியாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட பைக் ரைடர் என்றால் அது டிடிஎஃப் வாசன் தான். கோவையில் இருந்து லடாக் வரை சென்ற அவரது வீடியோ லட்சக்கணக்கான இளைஞர்களால் கவர்ந்திழுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் நீளமான முடி வளர்த்தி வந்த அவர் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அசாத்திய திறமைகள், பைக் சாகசங்களை கண்டு இந்த காலத்து 2K கிட்ஸ் கிறங்கி போயுள்ளனர்.

மேலும் வழிநெடுக பயணம் செய்யும்போது ஆங்காங்கே சிறுவர்களையும் வயதானவர்களையும் சந்தித்து பணம், பரிசு கொடுப்பது என சென்டிமென்ட் சேட்டைகளை செய்து வந்த இவருக்கு சப்ஸ்கிரைப்ர்களின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தியது.

இவரை பற்றி 90’s கிட்ஸ்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த நிலையில்தான் டிடிஎஃப் வாசனை காண அதிகளவு இளைஞர்கள் குவிந்தனர்.

முதன்முதலில் தனது தந்தையின் பழைய என்பீல்டு வாகனத்தை வைத்து பயணத்தை தொடங்கிய அவரிடம் தற்போது ஏராளமான சூப்பர் பைக்குகள் உள்ளன. தற்போது இந்தியா முழுவதும் சுற்றி வரும் இவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களை காண திட்டம் போட்ட அவர், 30 பேர்தான் வருவார்கள் என எதிர்ப்பார்த்து ஒன்றரை கிலோ கேக்குடன் காத்திருந்தார். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். பிரம்மாண்ட கேக்குடன் அவர்கள் வந்திருந்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

View this post on Instagram

A post shared by vasan (@vasan__enfielder)

ஆனால்நேரம் அதிகமாக அதிகமாக கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசே திணறினர். இதனை அடுத்து மேலும் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு ரசிகர்களை கட்டுப்படுத்தியதோடு இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னறிவிப்பின்றி ஏற்பாடு செய்யக்கூடாது என வாசனை எச்சரித்து சென்றனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை அன்னூர் சாலையில் உள்ள பெலஹாதி அருகே உள்ள TN HOME MADES அருகே இந்த சந்திப்பு நடைபெற்றது. ஒரு நடிகருக்கு வரும் கூட்டத்தை போல இவரின் சந்திப்பு அமைந்திருந்தது சோசியல் மீடியாவே அதிர்ந்து போனது.

Views: - 1059

0

0