ஜனாதிபதி வேட்பாளர் வரும் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நபர் : கையில் இருந்த காப்பை கொடுத்து காப்பாற்றிய அண்ணாமலை.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2022, 10:47 am
Annamalai Save - Updatenews360
Quick Share

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலிப்பு வந்தவருக்கு உதவினார்.

பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று புதுச்சேரியில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்ட வருகை தந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளர் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் விமான நிலையத்தில் இருந்து ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பாதுகாப்பு வளையத்தில்(Convoy) சென்று கொண்டிருந்த போது, ஒருவர் வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அண்ணாமலை காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கி வலிப்பு வந்தவருக்கு தனது கையில் இருந்த காப்பை கொடுத்து உதவினார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் பால் கனகராஜ், செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் உடனே காரில் இருந்து இறங்கி வலிப்பு வந்த அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அங்கு இருந்துவிட்டு, பின்னர் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்களின் பாதுகாப்பு வளையத்தில்(Convoy) சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒருவர் ‘வலிப்பு’ நோயினால் அவதியுற்றதை கண்டு தனது காரை நிறுத்த சொல்லி,தன் கையிலிருந்த காப்பை கழற்றி அந்த நபரின் கையில் செலுத்தினார் நம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள்.உடன் அவரின் துடிப்பு நின்றது. நிகழ்ச்சியை விட ஒரு உயிர் முக்கியம் என்ற உயர்ந்த பண்பை கொண்டிருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுடன் வானதி ஸ்ரீனிவாசன், சக்ரவர்த்தி, நயினார் நாகேந்திரன், கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ் அவர்களுடன் கிண்டியில் நடு சாலையில் இன்று நான், நாங்கள் ஆர் எஸ் எஸ் என்ற பல்கலைக்கழகத்தில் வளர்ந்தவர்கள்.பயின்றவர்கள் என பதிவிட்டுள்ளார்.

Views: - 506

0

0