தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை : நிரம்பி வழியும் நீர்நிலைகள்..!

3 September 2020, 9:07 am
Quick Share

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் 11 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்திருந்தது. இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில், திண்டுக்கல், மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதியில் பெய்த மழையால், நகரின் மைய பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, பாம்பார் அருவி போன்றவற்றிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், மலை காய்கறி சாகுபடி பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலை, திரிப்பூர், கோவை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. வெப்பம் தனிந்து குளிர்ந்த காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0