மது குடிக்க பணம் தர மறுத்த மனைவி கொலை : காவல்நிலையத்தில் கணவன் சரண்!!

17 April 2021, 12:22 pm
Husband Arrest -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியில் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தான்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்த ஷாஜி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு வீடு கட்ட பேரூராட்சியில் இருந்து கிடைத்த இரண்டு லட்சம் மற்றும் தனியார் வங்கி கடன் 40 ஆயிரம் சேர்த்து பாறசாலை குறுங்குட்டி பகுதியில் வீடு கட்டி வருகின்றனர்.

ஆனால் கணவர் ஷாஜி, வீடு கட்டுவதற்காக வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயை பெருமளவில் சீட்டு விளையாடி மற்றும் மது குடித்துக் தீர்த்துள்ளார். மனைவி பலரிடம் கடன் வாங்கி வீடு வேலைகளை செய்து வந்துள்ளார்.

மீண்டும் மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டு பல முறை தகறாறு செய்துள்ளார். தனது மகனின் எதிர்காலம் பார்த்து அந்த பணத்தை மீனா கொடுக்காததால், ஆத்திரத்தில் கத்தி போன்ற பங்கர ஆயுதங்களால் உடலில் பல இடங்களில் சரமாரியாக மனைவியை வெட்டி தப்பியோடினான்.

இந்த தாக்குதலில் மீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனிடம் சென்று தாயை கொலை செய்து விட்டதாக கூறி பாறசாலை காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளான் ஷாஜி. அந்த நேரத்தில் தாயை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கி திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்ற போது மீனா ஏற்கனவே உயிர் இழந்த சம்பவத்தை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கணவர் ஷாஜி மீது வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம் பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 30

0

0