உடலுறவுக்கு மறுத்த மனைவி : கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரக் கணவன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2021, 7:21 pm
Wife Murder Husband Arrest - Updatenews360
Quick Share

தருமபுரி : ஒகேனக்கல் அருகே குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவன் உல்லாசத்துக்கு மனைவி வர மறுத்ததால் கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி ஜெரினா. இவருடைய கணவர் கலில். இவா்களுக்கு இரண்டு பெண்கள் ஒரு மகன் உள்ளாா்கள். மூவருக்கும் திருமணமாகி வெளியூாில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

கணவன் கலிலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டைகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் இருந்த கலில் சுமார் 2 மணி அளவில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளாா்.

அப்போது இருவருக்கும் மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குடிபோதையில் இருந்த கலில் அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் குத்தியதில் ஜெரினா வீட்டின் வெளியே சத்தம் போட்டவாறு வந்துள்ளாா்.பின்னா் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்தார்.

கத்தியால் குத்தியதும் கலில் அங்கு இருந்து தப்பி ஒடியுள்ளாா். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினா் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தப்பியோடிய கலிலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லசாத்துக்கு வர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 555

0

0