பெண்ணை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற காட்டு யானை : கணவன் கண்முன்னே நிகழ்ந்த சோகம்.. வனத்துறையினரின் அலட்சியத்தால் தொடரும் உயிர்பலி!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 6:02 pm

அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை, கணவன் கண்முன்னே காட்டு யானை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டுவதற்காக இன்று காலை பால் வடிக்கும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு திடீரென குட்டியுடன் வந்த பெண் யானை பால் வடிக்கச்‌ சென்றவர்களை விரட்டியது. இதனால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதில் அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளி ஞானவதியை (வயது 50) யானை மிதித்து கொன்றது. மற்ற தொழிலாளர்கள் அலறி அடித்து தப்பினர்.

கடந்த சில தினங்களாக அந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், யானைகளை விரட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

ஞானாவதியின் கணவர் மோகன்தாஸ் உதவிக்கு சென்ற நிலையில், கணவர் கண்முன்பே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது சிற்றார் தோட்ட தொழிலாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!