சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டுயானை: ஆபத்தை உணராமல் செல்பி எடுத்த பொதுமக்கள்..!!

Author: Aarthi Sivakumar
8 September 2021, 4:21 pm
Quick Share

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி சாலையில் ஒற்றை காட்டுயானை சாலையோரம் வழிமறித்து நின்று கொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி வனப்பகுதிக்குள் யானைகள், மான், காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியின் நடுவில் ஓசூர் – ஒகேனக்கல் சாலை செல்கிறது.

Hosur-A-lone-wild-elephant-standing-on-the-roadside-People-taking-selfies-without-realizing-the-danger

இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வனவிலங்குகள் சாலை ஓரத்தில் நிற்பதும், சாலையை கடந்து செல்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று மரக்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

அதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று செல்ஃபி எடுத்தும் அச்சுறுத்தியும் சென்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.

Views: - 394

0

0