தண்ணீர் குடிக்க தனி ஆளாக வந்த காட்டு யானை… இம்சை இல்லாமல் அனுப்பி வைத்த வனத்துறையினர்..!!

10 July 2021, 1:21 pm
Quick Share

கோவை: ஆனைகட்டி அருகே செங்கல் சூலையில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை ஆண் யானை சாலை அருகே நின்றதால் கோவை ஆனைகட்டி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி செல்லும் மலை பாதை அருகே உள்ள கங்கா சேம்பரில் நேற்று மாலை ஒற்றை ஆண் யானை செங்கல் சூளையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றது. அப்போது செங்கல் சூளையில் இருந்த நாய் ஒன்று யானையை பார்த்து குரைத்துள்ளது. இதனையடுத்து ஆவேசமடைந்த யானை சாலைக்கும், தண்ணீர் தொட்டிக்கும் இடையே சுற்றித் திரிந்தது.

இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை நிறுத்தி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். எனினும் சுமார் 20 நிமிடம் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலை ஓரத்திலேயே நின்று கொண்டிருந்ததால் கோவை ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

தற்போது வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிக்குள் வருவதால் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 138

0

0