சிறுமுகை அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் : வனத்துறையினர் போராடி விரட்டியடிப்பு!!

1 November 2020, 12:43 pm
Elephants - Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை அருகே வனப்பகுதியில் இருந்து வெளிவந்த யானைகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்தது.

சிறுமுகை வனத்திலிருந்து நேற்று முன்தினம் மூன்று காட்டுயானைகள் வெளியேறி அருகில் உள்ள இடுகம்பாளையம் கிராமத்தில் புகுந்துள்ளது. அதிகாலை பால் கறக்க சென்ற விவசாயி மூன்று யானைகள் நடமாடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளிடத்தில் கூறினார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த சிறுமுகை வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பகல் முழுவதும் கிராமத்தில் உள்ள புதர்களில் மறைந்து நின்று யானைகள் மாலையில் வெளியே வந்தபோது வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானைகளை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து யானைகளை வனத்திற்குள் விரட்டிவிடப்பட்டது. இதையடுத்து மீண்டும் கிராமத்திற்குள் வராமல் இருக்க சிறுமுகை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். .

Views: - 16

0

0