தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை ஆரம்பமாகுமா? உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம்!!

13 July 2021, 1:41 pm
Ponmudi- Updatenews360
Quick Share

சென்னை : திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்ககை ஆரம்பம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட்-1ம் தேதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும், கல்லூரி திறப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, முதல்வர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 94

0

0