தர்காவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக்கொள்வார்களா? கொளுத்தி போடும் ஜான் பாண்டியன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2025, 7:44 pm

பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாள் மண்டகப்படியாக தேவேந்திர குல வேளாளர் மக்களின் மண்டகப்படிக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் வருகை புரிந்தார்.

விழா முடிந்த பின் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஜாதி வரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என தாம் உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ முதல் நாளே அனிருத்துக்கு வந்த தலைவலி..தியேட்டர் வாசலில் காத்திருந்த அதிர்ச்சி..!

கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகளுக்கு சமீப காலமாக நடைபெற்று வரும் பாலியல் சீண்டலுக்கு அரசு கடுமையான தண்டனை சட்டம் கொண்டு வர வேண்டும்.

அதேபோல மாணவர்கள், சிறுவர்களுக்கு பெண்களால் ஏற்படும் பாலியல் சீண்டல்களுக்கும் சரிசமமான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் சமீப காலமாக நடைபெற்று வரும் பிரச்சனைக்கு காரணமான எம்.பி., எம்.எல்.ஏ., மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தர்காவில் பன்றியை வெட்டினால் ஏற்றுக் கொள்வார்களா…?

அதேபோல தர்கா இருப்பதாக சொல்லும் இடத்தில் பன்றியை வெட்டினால் ஏற்றுக் கொள்வார்களா…? அமைதியாக போராட்டம் நடத்திய இந்து சாமியார்கள், சன்னியாசிகள் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

நல்லிணக்கத்தோடு பொதுமக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இது போன்ற பிரச்சனைகள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..பழனியில் கஞ்சா புழக்கம் போன்ற போதை கலாச்சாரம் அதிகரித்து வருவது கண்கூடாக தெரிகிறது .

Jhon Pandiyan Controversy Talks

பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அறநிலையத்துறை எடுத்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?