இன்ஸ்டா மூலம் முளைத்த காதல்… கணவனை கைவிட்டு விட்டு எஸ்கேப்பான இளம்பெண் ; தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்…!!

Author: Babu Lakshmanan
16 November 2023, 5:04 pm

காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் மனைவி இன்ஸ்டாகிராம் மூலம் வேறு நபருடன் பழகியதுடன் தன்னை விட்டு விட்டு அவருடன் சென்று திருமணம் முடித்துக் கொண்டதாக கூறி இளைஞர் ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருக்கு வயது 27. இவர் கேக் மாஸ்டராக பணி செய்து வருகிறார். இவர் இன்றைய தினம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்த நிலையில், போலீசார் என்னவென்று விசாரிப்பதற்காக சென்ற போது, திடீரென கையில் இருந்த பெட்ரோல் கேனை ஒன்றை எடுத்து தலையில் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார். இதனை அங்கிருந்து போலீசார் தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேச்சி முத்து கூறுகையில்:- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனியாக கங்கைகொண்டான் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு instagram மூலம் தனிநபர் ஒரு வருடம் சாட்டிங் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதை கண்டித்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து தங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சண்முகப்பிரியா காணாமல் போனதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தான் பல்வேறு இடங்களில் விசாரித்த போது சண்முகப்பிரியா வேறொரு நபருடன் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்து அவர் காணாமல் போனபோது நான் சம்பாதித்த முப்பது ஆயிரம் ரூபாய் பணம், வீட்டில் இருந்த நகை உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் பேச்சிமுத்துவை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!