வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை

18 September 2020, 5:08 pm
Quick Share

நாகப்பட்டினம்: சீர்காழியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் அடித்துக் கொலை சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவில் வசிப்பவர் அரசுபள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தஜோதி. இவரது மனைவி சித்திரா-49 என்பவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சித்திராவை தலையில் அடித்துள்ளார். இதில் தலை சிதறி சித்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அருகில் வசித்த பெண் வெளியே வந்து பார்த்த போது சித்திரா ரரத்த வெள்ளத்தில் பினமாக கிடப்பது கண்டு அலறியுள்ளார்.

இதனையடுத்து ஆனந்தஜோதி மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்த போதுதான் கோலம் போட வந்த சித்திரா கொலை செய்யபட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த சீர்காழி டிஎஸ்பி யுவப்பிரியா தலைமையிலான போலீசார் சித்திராவின் உடலை கைப்பற்றி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணம் என விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மமயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். அடுத்தடுத்து குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 4

0

0