கணவரை இழந்த பெண்ணுக்கு “பாலியல் மிரட்டல்“ : மாமனாரை கடத்தியதாக மகள்களுடன் தாய் மனு!!

25 November 2020, 2:12 pm
Mother Petition- Updatenews360
Quick Share

திருப்பூர் : கணவருக்கு சொந்தமான இடத்தை நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர வேண்டி பாதிக்கப்பட்ட பெண் தனது பிள்ளைகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சவிதா இவரது கணவர் ரவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் ,தனது இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மாமனார் சாமியப்பன் , மாமியார் பாலாமணி ஆகியோருடன் வசித்து வருகிறார் .

இந்நிலையில் மாமனார் சாமியப்பனுக்கு சொந்தமான நிலத்தை மாமியாரின் உறவினர் சௌந்தராஜன் என்பவர் நம்பிக்கை மோசடி செய்து அவரது பெயருக்கு மாற்றி எழுதி கொண்டதாகவும் அதே போல் தற்போது தனது மாமியாரை எனக்கு எதிரியாக மாற்றி மாமனாருக்கு சொந்தமான 5.92 ஏக்கர் நிலத்தை அவரது பெயருக்கு உயிர் எழுதி எடுத்துக்கொண்டுள்ளார் .

இந்நிலையில் சொளந்தர்ராஜன் பாலின இச்சைக்கு நான் உடன்பட மறுத்ததால் என்னை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் செளந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது என் மாமனாரை சௌந்தர்ராஜன் , விஸ்வநாதன் மற்றும் ரங்கசாமிவ் ஆகியோர் எங்கோ கடத்தி வைத்துக்கொண்டு நான் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றால் தான் அவர்களை விடுவிப்பதாக கூறியும் , இல்லை என்றால் குடும்பத்தோடு கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இதன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து இழந்த சொத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட சவிதா தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Views: - 0

0

0