போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2025, 6:53 pm

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது, அவர்கள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர்கள் வீரத்தேவர், சின்ன தேவர் ஆகியோர் கவுசல்யாவை, 20.02.2001ல் அதிகாலை 2:00 மணிக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

இதையும் படியுங்க: அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

அப்போது கவுசல்யாவை, காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் மானபங்கம் செய்தனர். அன்று மாலை மீண்டும் கவுசல்யாவை, காவலர்கள் விசாரணைக்கு அழைத்தால் மீண்டும் வர வேண்டும் என வீட்டிற்கு அனுப்பினர்.

இதனால் மனமுடைந்த கவுசல்யா, தன் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் மீட்டு காப்பாற்றினர்.

இதைத்தொடர்ந்து கவுசல்யாவின் கணவர் சக்திவேல் மனைவிக்கு நடந்த கொடுமைகளை திண்டுக்கல் ஆர்.டி.ஓ.விடம் புகாரளித்த நிலையில் அவர் 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் வழக்கறிஞராக சண்முகபார்த்தீபன் ஆஜரானார். இந்த வழக்கு நீதிபதி தீபா விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர்.

10 Years Life Judgement For Inspector

அதில், ஒய்வு காவல் ஆய்வாளர் ரெங்கசாமி, காவலர்கள் வீரத்தேவர், சின்னதேவர் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!