போனில் வந்த திடீர் அழைப்பு… கடை தேடி வந்து மசாஜ் செய்த பெண் ; ரூ.2 லட்சம் கேட்டு பர்னிச்சர் கடை உரிமையாளருக்கு மிரட்டல்… பெண் உள்பட 3 பேர் கைது..!

Author: Babu Lakshmanan
5 November 2022, 1:53 pm
Quick Share

திருப்பூர் அருகே பெண்ணிடம் மசாஜ் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அவரப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (63). இவர் பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டாம்பாளையத்தில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு கடந்த 24-ம் தேதி திவ்யா என்ற பெண்ணிடம் இருந்து வந்த அழைப்பில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், ரூ. 1200-ல் மசாஜ் செய்யலாம் என அழைத்துள்ளார்.

இதனை நம்பி அவர் அன்றிரவு கடையின் பின்புறம் வரச்சொல்லி மசாஜ் செய்து உள்ளார். இதையடுத்து, மீண்டும் 26-ம் தேதி இரவு உடல் மசாஜ் செய்ய புஷ்பலதா வந்துள்ளார். வந்து பத்தாவது நிமிடத்தில் இளைஞர்கள் 2 பேர் அறைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும், மசாஜ் செய்ய வந்த பெண், சண்முகராஜ் ஆகியோரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டு சண்முகராஜ் அணிந்திருந்த 1 பவுன் மோதிரம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

அதில் ஒரு ஏடிஎம் கார்டில் இருந்து ரூ. 22 ஆயிரத்து 100-ஐ எடுத்துள்ளனர். மேலும், இரண்டு நாள்களுக்குள் ரூ. 2 லட்சம் தராவிட்டால், இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளனர். இதையடுத்து, சண்முகராஜ் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அவர்கள் அழைத்த செல்போன் சிக்னலை வைத்து கரூர் சேர்ந்த கோகுல்ராஜ் (22). யுவராஜ் (21) மற்றும் உடுமலை சேர்ந்த புஷ்பலதா (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Views: - 397

0

0