இரண்டாவது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து பலி : செல்போனை பிடிக்க முயற்சித்த போத விபரீதம்!!

30 October 2020, 6:14 pm
woman dead - Updatenews360
Quick Share

சென்னை : கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால் , அதை பிடிக்கும் முயற்சி செய்த இளம்பெண் 2வது மாடியில் இருந்து விழுந்து உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் அருகேயுள்ள நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யாமினி என்ற பெண் பி.காம் பட்டதாரி ஆவார். இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 25 -ந் தேதி யாமினியின் தாயார் தாட்சாயிணி மற்றும் அவரது உறவினர்கள் இரவு உணவு அருந்தி விட்டு , 2 வது மாடியில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது யாமினி பால்கனி சுவற்றின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும், கையில் இருந்த செல்போன் நழுவியதால் தாவி பிடிக்க முயன்று , மாடியில் இருந்து தவறி விழுந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் இன்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த தலைமை செயலக காலணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த யாமினியின் மூத்த சகோதரிக்கு திருமணம் முடிந்து விட்டது, இதனால் அடுத்ததாக யாமினியின் திருமணம் குறித்து அன்றைய தினம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே செல்போனை பிடிக்க தவறி விழுந்தாரா ? திருமண பேச்சு பிடிக்காமல் குதித்து விட்டாரா ? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.