சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடவு செய்து பெண்கள் எதிர்ப்பு : ஊராட்சி நிர்வாகத்திற்கு பாடம் புகட்டிய கிராமம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 October 2021, 8:19 pm
மயிலாடுதுறை : சேறும் சகதியுமாக உள்ள சாலை குறித்து புகாரளித்தும் கண்டுகொள்ளாத நிர்வாகத்திற்கு புத்தி புகட்டும் வகையில் நாற்று நடவு செய்து எதிர்ப்பை தெரிவித்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சியில் வைகல் கிராமத்தில் கடந்த 11 வருடங்களாக அப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனை அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியத்திற்கும், அரசு அதிகாரிக்கும் பல முறை மனுக்கள் அளித்தும், கோரிக்கைகள் வைத்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனை எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்ளாத நிலையில், வைகல் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவரது வயலில் நெற்பயிர் நடுவதற்காக வெளியூரிலிருந்து வேலைக்காக வந்த பெண்கள் சாலையை பார்த்து மிகவும் மோசமான நிலையில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள இடங்களைப் பார்த்துவிட்டு இது என்ன சாலையா, இல்லை நடுவு நடும் வயலா என்று கேலி செய்து ஊராட்சிக்கு புத்தி புகட்டும் வகையில் அந்த சேறும், சகதியும் உள்ள சாலையில் வேலைக்கு வந்த பெண்கள் இறங்கி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நெற்பயிர்களை நடவு செய்தனர்.
தார்சாலை வேண்டும் என்று திடீர் நடவு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியூரிலிருந்து வந்த பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0