கோவை நரசிபுரம் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி : கோவிலுக்கு சென்று திரும்பும் போது சோகம்!!
29 January 2021, 2:20 pmகோவை : கோவை நரசிபுரம் அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய தொழிலாளி காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நரசிபுரம் ஆத்தூர் வனப்பகுதியில் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வனத்துறையினருடன் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில் காட்டு யானைத் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த நபர் குறித்து போலீசார் விசராணை செய்த போது இறந்தவர் செல்வபுரம் எல்.ஐ.சி காலணி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 45) என்பதும், பெயிண்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர் நேற்று நரசிபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. கார்த்திக் உடலை மீட்ட போலீசார் பிரேத பிரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
0
0