கட்டிட பூச்சு வேலையின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி : வைரலாகும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 11:29 am
Villupuram Eb Dead 1 -Updatenews360
Quick Share

விழுப்புரம் : திண்டிவனம் கல்லூரி சாலையில் புதிதாக கட்டிய கட்டிட பூச்சு வேலையின் போது ஊரல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர் மின்னழுத்த மின்சார ஒயரில் சிக்கி எரிந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 35). இவர் மாலை முருங்கப்பாக்கம் கல்லூரி சாலையில் புதிதாக கட்டிய கட்டிடத்தின் பூச்சு வேலையை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின்சார ஒயரில் சுரேஷின் கைபட்டு மின்சாரம் தாக்கி எரிந்த நிலையில் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி எரிவதைக் கண்ட சக ஊழியர்கள் பயத்தில் அலறினார்கள்.

இவருடன் மேலும் மூவர் பணியில் இருந்தனர். மின்சாரம் தாக்கியதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின்சாரம் தாக்கி எரிந்த போது மின்சார வயர் அறுந்து விழுந்தது.

மின் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் ஊழியர்கள் வந்து மின்சாரத்தை நிறுத்தினார்கள் . பூச்சு வேலைக்காக கட்டப்பட்ட சாரம் மின்சார ஒயரைதொடும் படியாக இருந்ததுதான் விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் இறந்த சுரேஷ் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி இறந்த சுரேஷுக்கு சரளா என்ற மனைவியும் மனிஷா 7 மகளும், லோகித் 5 என்ற மகனும் குழந்தைகள் உள்ளனர்.

Views: - 559

0

0