தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்: சவரனுக்கு எவ்வளவு விலை குறைவு தெரியுமா..?

Author: Rajesh
2 February 2022, 12:21 pm
Quick Share

சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது தங்கம் வாங்குவோரிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அண்மையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ. 4514க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ. 36,112க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39,040க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் விலை மாற்றமின்றி ரூ.65.60க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.65,600 ஆக உள்ளது.

Views: - 1382

0

0