தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை : குற்றவாளியை சுற்றி வளைத்த போலீசார்…

Author: kavin kumar
27 January 2022, 3:32 pm
Quick Share

வேலூர் : வேலூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 40). இவகைதுர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (45) என்பவர் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அதைக்கண்ட சீனிவாசன் குடித்துவிட்டு ஏன் தகராறில் ஈடுபடுகிறாய் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த முருகேசன் மகன் சீனிவாசன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனின் மார்பு பகுதியில் பலமாக குத்தியதாக கூறப்படுகிறது. அதனால் அலறியபடி துடிதுடிக்க சீனிவாசன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இதையடுத்து முருகேசன் மகன் சீனிவாசன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சீனிவாசனை மீட்டு உடனடியாக பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். அதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தகவலறிந்த இணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய முருகேசன் மகன் சீனிவாசனை கைது செய்தனர்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 3258

    0

    0