கோவையில் உலக ஆட்டிசம் மாத விழிப்புணர்வு பேரணி: 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர் பங்கேற்பு..!

Author: Rajesh
3 April 2022, 10:02 am

கோவை: கோவையில் இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலகெங்கிலும் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிசம் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இந்திய குழந்தைகள் மருத்துவ குழு சார்பில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை குணப்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பிரிவின் தலைவர் ஜெயவர்தனா தலைமையில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்திய குழந்தைகள் மருத்துவ குழுவின் மாநில செயலர் ராஜேந்திரன் துவக்கி வைத்த பேரணியை துவக்கி வைத்தார்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள்,மருத்துவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் இந்திய மருத்துவக் குழு கோவை பிரிவின் செயலர் பவுசியா மோல்,பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!