பானிபூரி பிரியரா நீங்கள்…இது உங்களுக்குதான்: உருளைக்கிழங்கில் மிதந்த புழு…வடமாநில இளைஞரை தாக்கிய பொதுமக்கள்..!!

Author: Aarthi Sivakumar
20 September 2021, 6:04 pm
Quick Share

சென்னை: பானிபூரி கடையில் இளைஞர் ஒருவர் பானிபூரி வாங்கிச் சாப்பிட அதில் புழு இருந்ததால், வடமாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பட்டரைவாக்கம் பகுதியில் பானிபூரி கடை இயங்கி வருகிறது. இந்த இளைஞர் ஒருவர் பானிபூரி வாங்கிச் சாப்பிட, அதில் புழு மிதந்ததைப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே பானிபூரி வியாபாரி வைத்திருந்த உணவுப் பொருட்களைப் பரிசோதிக்க அதில் உருளைக்கிழங்கு கெட்டுப்போய் புழு மிதப்பதாக தெரியவந்தது.

இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள், வடமாநில வியாபாரியை கட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் பானிபூரி உணவு பொருட்கள் தயாரிக்கும் இடத்தை அறிந்து கொண்டு, அங்கு சென்ற இளைஞர்கள் அதன் உரிமையாளர் மற்றும் வியாபாரியை போலீசில் ஒப்படைத்தனர்.

ஏற்கெனவே பானிபூரிக்கான பூரி மாவைத் தொழிலாளர்கள் காலால் மிதித்துப் பிசைவதாக சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேபோல் பிரபல சேமியா நிறுவனத்தில் காலால் சேமியாவைப் பரப்பி காயவைக்கும் வீடியோவும் வெளியானது.

ரஸ்க்கை காலில் வைத்து பேக் செய்யும் வீடியோவும் உணவுப் பொருள்கள் வாங்கும் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தற்போது உருளைக்கிழங்கில் புழு நெளிந்த சம்பவம் பெரிய கடைகள் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் எப்போதுமே உணவுத் துறை அதிகாரிகள் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக உள்ளது.

Views: - 117

0

0