வைகோவுக்கு எதிராக பேசணும்னு பேசறாரு.. துரை வைகோ தான் எங்கள் அடுத்த தலைவர் : மதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 7:22 pm

மதிமுக திமுகவுடன் இணைக்க வேண்டும் என மதிமுக அவை தலைவர் திருப்பூர் திருவிழா வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துரைச்சாமியின் கருத்து தொடர்பாக மதிமுக மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் பூமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :

இன்று காலை மதிமுக அவைத்தலைவர் திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று பேசிய கருத்து தலைவர் வைகோவின் கருத்து இல்லை.

அவைத்தலைவர் வேண்டும் என்றே தலைவர் வைகோவின் கருத்துக்கு ஏதிராக பேசுகிறார். கட்சியில் பலர் வருவார்கள் போவார்கள் ஆனால் தலைவர் வைகோவின் கருத்தே இறுதியானது , தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்பவர்கள் தான் கட்சி பொறுப்பில் நியமிக்கபடுகின்றனர்

யாரும் உறவினர் என்ற முறையில் பொறுப்பு வழங்கப்படவில்லை, அவைத்தலைவர் தெரிவித்த கருத்து சுயநல நோக்கத்திற்காக தெரிவித்துள்ளது அதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

அவைத்தலைவர் திமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இப்போது திமுகவுடன் இணைய வேண்டும் என்று சொல்வது ஏன் ?

மாவட்ட செயலாளர்கள் முடிவின் அடிப்படையில் தான் துரை வைகோவிற்க்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. வைகோவுக்கு இதில் விருப்பம் இல்லை மாவட்ட செயலாளர்கள் முடிவின் அடிப்படையிலயே பொறுப்பு வழங்கப்பட்டது.

வாரிசு அரசியல் எங்குதான் இல்லாம இருக்கு ..? இந்திய முழுவதும் பல கட்சிகளில் வாரிசு அரசியல் இருக்கதான் செய்கிறது வைகோவிற்கு பிறகு துரை வைகோ தான் அடுத்த தலைவர் அது தான் எங்கள் விருப்பம் என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!