இல்லை இல்லைனு சொன்னீங்க.. இப்ப என்னாச்சு? திருமணமான பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் இளம் நடிகை டேட்டிங் : ரகசிய உறவு கசிந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 12:52 pm

சினிமா உலகில் உள்ள பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்களுடன் காதல் கிசுகிசுக்களில் வீழ்வது வாக்கம்தான். அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமா நடிகை ஒருவர் இளம் இந்திய வீரருடன் ரகசிய உறவு வைத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கேரளத்து வரவான அந்த நடிகை மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றவர். தனது ஒரே ஒரு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட அந்த நாயகி, தமிழ், தெலுங்கு, கன்னம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக வலம் வருகிறார்.

தமிழில் அவர் முதன்முறையாக ஒல்லி நடிகருடன் நடித்த படம் ஊத்திக்க, தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு கிளாமர், லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.

பின்னர் தமிழில் மீண்டும் வாரிசு நடிகருடன் தலைகாட்ட, அந்த படம் வந்த வழியே தெரியாமல் போனது. இதையடுத்து தற்போது தெலுங்கில் 4 படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை, இந்திய கிரிக்கெட் வீரருடன் ரகசிய உறவு வைத்துள்ளார்.

இருவரும் ஜோடியாக வலம் வந்த நிலையில், இருவருக்குள் காதல் இல்லை என்ற பேச்சு சமீபத்தில் அடிப்பட்டது. ஆனால் இருவருக்குள் நெருக்கம் அதிகமாகி ரகசிய உறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த இளம் கிரிக்கெட் வீரர் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். அந்த வேகம் காதலிலும் புகுத்தியுள்ளதால் தான் இந்த விஷயம் வெளியில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாள் அந்த உண்மை வெளிச்சத்திற்கு வரத்தான் போகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!