ஆன்லைன் சூதாட்டத்தால் சொத்தை இழந்த வாலிபர்! கடன் செலுத்த முடியாமல் தற்கொலை!!

15 September 2020, 4:41 pm
Online Game Suicide - updatenews360
Quick Share

சென்னை : செங்குன்றம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்த தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளாகி தன்னுடைய வருமானம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து நண்பர்களிடம் கடன் வாங்கியும் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தினேஷ் வாங்கிய கடனுக்கு கைவசம் இருந்த சொத்தை விற்று கடன்களை அடைத்து உள்ளனர் இருப்பினும் தொடர்ந்து சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் மனமுடைந்த தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர் பல லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து செங்குன்றம் காவல் ஆய்வாளர் ஜவகர் உள்ளிட்ட காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இதுபோன்று இளைஞர்கள் ஆன்லைனில் அதிக அளவு கடன் வாங்கி ஈடுபட்டு பெருமளவு பணத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது சீன நாட்டு வீடியோ கேம்களை ஆப்களை தடை செய்த மத்திய அரசு உழைக்கும் ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் லாட்டரி விற்பனையை தடுக்க மாநில அரசு ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் இது போன்ற ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Views: - 1

0

0