நண்பருடன் பைக்கில் வந்த இளைஞர் : மரம் முறிந்து விழுந்து பலியான சோகம்!!

7 November 2020, 12:15 pm
youth Dead - Updatenews360
Quick Share

கோவை : நண்பருடன் பைக்கில் வந்த இளைஞர் மீது மரம் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த கோபு குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சரவணம்பட்டியில் இருந்து தோலம்பாளையம் நோக்கி மாலை சுமார் 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது காரமடை அருகே புகையிலை குடோன் பகுதிக்கு வந்தபோது கடந்த இரு தினங்களாக மழையில் நனைந்து வலுவிழந்த காணப்பட்ட மரம் கோபு குமார் வந்த வாகனத்தின் மீது விழுந்துள்ளது. இதில் கோபு குமார் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் அவரை அங்கிருந்து மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சென்று பரிசோதனை செய்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரமடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனமழையால் மரம் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0