இளம்பெண்ணிற்கு போன் மூலம் பாலியல் தொல்லை : தி.மு.க. நிர்வாகி கைது..!

27 August 2020, 6:18 pm
dmk arrest - updatenews360
Quick Share

சென்னை : சென்னை தண்டையார்பேட்டையில் இளம்பெண்ணிற்கு செல்போன்ற மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டுவில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சசிகலா என்ற இளம்பெண் குளிக்கும் போது, அதனை வீடியோ எடுத்து வைத்து, 4 ஆண்டுகளாக சீரழித்த தி.மு.க. நிர்வாகியின் செயல் அனைவரிடத்திலும் ஆத்திரத்தை கிளப்பியது.

இந்த கொடூர சம்பவத்திற்கு அவரது சகோதரரும் உடந்தை எனத் தெரிய வந்ததையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவருக்குமான தண்டனை இன்னும் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படாத நிலையில், மேலும் ஒரு தி.மு.க. நிர்வாகியின் வக்கிர செயல் அம்பலமாகியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் நேதாஜி நகர் 5வது தெருவைச் சேர்ந்த மனோகர், முன்னாள் தி.மு.க மாவட்ட துணைசெயலாளராவார். ஃபாஸ்ட் புட்டை நடத்தி வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போன் மூலம் ஆபாச வீடியோக்கள் அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியும், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தி.மு.க. நிர்வாகியின் இச்சைக்கு பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இது தொடர்பாக ஆர்.கே. நகர் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், தி.மு.க நிர்வாகி மனோகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த நபரால், மேலும் வேறு ஏதாவது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா..? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.