மதுவுக்கு அடிமையான 19 வயது இளைஞரால் சீரழிந்து போன பட்டதாரி குடும்பம் : அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி..!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 12:26 pm

பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்தில் 19 வயது தம்பி போதையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை திருவேகம்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி. இவர் CSI பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

ஆசிரியரான செல்வராணியின் கணவர் பிரபுதாஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார் . இந்த தம்பதிகளுக்கு வின்சென்ட் என்ற மூத்த மகனும் ஷெர்லி ஜான் என்ற இளைய மகனும் உள்ளனர்.

மூத்த மகன் பச்சையப்பன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகன் பச்சையப்பன் பள்ளியில் + 2 படித்து வருகிறார்.

அதிகம் படித்த இந்த குடும்பத்தில் தந்தையின் மறைவுக்கு பிறகு இளைய மகன் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முழு போதையில் தாய் செல்வராணியை இளைய மகன் செல்லி ஜான் தாக்கியுள்ளான்.

அம்மாவை ஏன் அடிக்கின்றாய் என கண்டித்த அண்ணன் வின்சென்ட்டை, சமையல் அறையில் இருந்த காய்கள் நறுக்கும் கத்தியை எடுத்து வந்து இடது மார்பில் ஷெல்லிஜான் பலமாக ஓங்கி குத்தியுள்ளார் .இதில் வின்சென்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார் .

சம்பவம் அறிந்த தாலுக்கா காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தம்பி ஷெல்லி ஜானை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மிகுந்த வசதியும், கல்வியறிவும் பெற்ற உறவினர்கள் (ஆசிரியர்கள்) உள்ள குடும்பத்திலேயே, மகனை சரியாக வளர்க்காத காரணத்தினால், போதைக்கு அடிமையாகி 19 வயதிலேயே கொலை செய்யும் அளவுக்கு சென்ற செயல் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுடைய மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!