பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் போட்டு அலப்பறை… சாலையில் கெத்து காட்டிய இளைஞர்… திருச்சி போலீஸார் வைத்த ஆப்பு..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 9:51 am

அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை சமூக வலைதளத்தில் பரவி வந்த இளைஞரை திருச்சி மாவட்ட காவல் துறை கைது செய்தது.

திருச்சி மாவட்டம் எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு ரீல் செய்து அதனை பதிவிட்டு வந்தார்.

இந்த சூழலில், நேற்று காலை எட்டரை கிராமத்தில் உள்ள கடைவீதியில் கையில் அரிவாளுடன் முகேஷ் நின்று கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் முகேஷ் அரிவாளுடன் சுற்றி திரிவதாகவும் திருச்சி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பார்த்த போது முகேஷ் நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுபோன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் கூடிய புகைப்படங்கள் அல்லது வீடியோ வீடியோவை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட காவல் துறையின் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு குழு எப்போதும் இதனை கண்காணிப்பார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!