சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்..! போக்சோவில் அதிரடி கைது..!…

17 August 2020, 10:02 pm
Quick Share

கோவை: காரமடை அருகே 17 வயது சிறுமிக்கு ஆசைகாட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து போக்சோவில் சிறையில் அடைத்தனர்.

கோவை காரமடை அடுத்த காளாம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள ஒர் தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயதான ஜீவானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 மாதமாக ஜீவானந்தம் அந்த சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் திருமண ஆசைகாட்டி பலமுறை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் இரண்டு மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இது தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்து போக்சோ சட்டத்தில் கீழ் கோவை சிறையில் அடைத்தனர். இளம் வயதில் காதலிக்கும் போது எல்லை மீறினால் என்ன நடக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒர் உதாரணம்.

Views: - 24

0

0