இரும்பு ராடால் இளைஞர் அடித்துக்கொலை : சாதி மறுப்பு திருமணம் காரணமா என காவல்துறை விசாரணை!!

2 November 2020, 2:14 pm
Youth Murder - Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : முன்விரோதம் காரணமாக பாஸ்ட்புட் கடை நடத்தும் இளைஞர் கல் மற்றும் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை அன்னை தெரசா தெரு பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத் (வயது 26). இவர் மறைமலை நகர் திருவள்ளுவர் பகுதியில் துரித உணவு(பாஸ்ட் புட்) கடையை நடத்தி வருகிறார்.

நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் தனது மனைவியை பார்க்க மறைமலை நகர் இரயில்வே காலனி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் மது அருந்துவதற்க்காக தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடை அருகே தனது நண்பர்களான சதீஷ், வினோத் ஆகியோருடன் சென்றுள்ளார்.

மாட்டுக் கறி கடை நடத்தும் மல்ரோசபுரம் விஜி என்ற வாலிபருக்கும் தேவபிரசாத்திற்க்கும் முன்விரோதம் காரணமாக அப்போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது விஜி மற்றும் அவரின் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து தேவ பிரசாத்தை கல்லால் அடித்தும் இரும்பு ராடால் அடித்தும் வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

தேவபிரசாத்தின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்தபோது 4 பேர்கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கடுமையாகத் தாக்கியதில் இரத்த வெள்ளத்தில் தேவபிரசாத் பிணமாக கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குற்றவாளி விஜய்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் காவல்துறையினர் தேவ பிரசாத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ,மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே விஜி என்பருக்கும் தேவபிரசாத்திற்க்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக கொலையா அல்லது சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கொலையா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 15

0

0