விளம்பர பலகையில் மோதிய பைக்.. கீழே விழுந்து எழுந்து நடந்த இளைஞர் : 5 நிமிடத்தில் சுருண்டு விழுந்து பலியான கொடுமை.. ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 4:57 pm

விழுப்புரம் : செஞ்சி அருகே சாலையோர விளம்பர பலகையில் மோதிய இளைஞர் சாலையோரம் நடந்து வந்து இறந்துள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 22) இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு செஞ்சியில் இருந்து தன் சொந்த ஊரான பள்ளியம்படிற்க்கு பைக்கில் செல்லும் பொழுது செஞ்சி நான்கு முனை சந்திப்பை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் மோதி மாட்டி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கிருந்து நடந்தே வந்து சாலையில் அமர்ந்த நிலையில் இறந்துள்ளார்.

மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பின்னர் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செஞ்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது,பிரேத பரிசோதனையில் சந்துருவுக்கு தலையில் பலத்த அடிபட்டு இறந்தது உள்ளாக தெரியவருகிறது.

https://vimeo.com/725232054

இளைஞர் சந்துரு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?