தமிழ் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் கே.ஜி.எப்.யாஷ்.? அந்த இயக்குனர் யார் தெரியுமா.?

Author: Rajesh
29 June 2022, 4:54 pm
Quick Share

கடந்த 2018ஆன் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் வெற்றிபெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் கே.ஜி.எப் 2 நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வசூலில் ரூ. 1000 கோடியை கடந்த வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக யாஷ் தமிழ் இயக்குனர் ஒருவருடன் கைகோர்க்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் யாஷ் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் தான், யாஷ் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், ஷங்கர் தற்போது ராம் சரண் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

இதன்பின் ஹிந்தியில் உருவாகவுள்ள அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்கவுள்ளார். தொடர்ந்து இத்தனை படங்களை கைவசம் வைத்துள்ள ஷங்கரின் இயக்கத்தில் கண்டிப்பாக யாஷ் அடுத்த நடிப்பது சாத்தியமில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 203

1

1