கோவையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்.. காலி செய்யாத மக்கள் : ஜேசிபியுடன் வீட்டை தரமட்டமாக்கிய அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 4:44 pm
House Demolish - Updatenews360
Quick Share

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக கோவை குனியமுத்தூர், குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினார்கள்.

கோவை மாநகர பகுதியில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் உள்பட ஏராளமான குளங்கள் உள்ளன. அவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்காக குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குனியமுத்தூர், குறிச்சி குளக்கரை காந்திநகர் பகுதிகளில் 173 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. இந்த வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக இந்த வீடுகளை குடி இருந்தவர்களுக்கு மாற்றிவிடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை எனவே மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் எந்திரங்களுடன் அங்கு சென்றனர்.

உடனே குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்ய மறுத்தனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் குடியிருப்புவாசிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த வீடுகளை மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதையடுத்து பொக்லைன் எந்திரங்களில் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றம் பணி தொடங்கியது, வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது குனியமுத்தூர், குறிச்சி குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டுவிட்டது. பலமுறை நோட்டீஸ் வழங்கி அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை எனவே போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 173 வீடுகளில் 42 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன மீதமுள்ள வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குளக்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெறும் என்று அவர் கூறினார்.

Views: - 486

0

0