மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

16 April 2021, 4:40 pm
chennai cctv - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் மேம்பாலத்தின் மேல் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரதான சாலையில் உள்ள எம்ஐடி மேம்பாலத்தின் மீது இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மீது விழுந்துள்ளார். காரின் மீது ஏதோ விழுந்தததை உணர்ந்த ஓட்டுநர் சிறிது தூரம் தள்ளிச் சென்று காரை நடுரோட்டில் நிறுத்திப் பார்த்துள்ளார். அப்போது, சாலையில் காயங்களுடன் ஒருவர் சுருண்டு கிடந்தார்.

பாலத்தின் மீது காலணிகள் இருந்ததால், அவர் தற்கொலை செய்து கொள்ள கீழே குதித்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் அந்த நபர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, மேம்பாலத்தின் மேல் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0