அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் இளைஞர் பலி..!!

17 January 2021, 11:55 am
alanganallur - updatenews360
Quick Share

மதுரை: அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.

அதன் தொடர்ச்சியாக உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்தனர். மேலும் படுகாயமடைந்த 14 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஜல்லிக்கட்டின் போது காளையை போட்டிக்கு அழைத்து சென்றபோது மாடு குத்தி படுகாயமடைந்த நவமணி என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Views: - 7

0

0